அநுர வெளியிட்ட அந்த கருத்து! கொந்தளிக்கும் சுமந்திரன்
எதிர்க்கட்சிகள் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) வெளியிட்ட கருத்துக்களை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் சுமந்திரன், ஜனாதிபதி அநுர பொதுக்கூட்டமொன்றில் பேசிய செய்தியொன்றை தனது எக்ஸ் கணக்கில் பகிர்ந்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டுள்ள பொது ஆணையை அபகரிக்க முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்றத்தில் தனக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதை நினைவில் கொள்ளுமாறும் நேற்று (14) ஜனாதிபதி எதிர்க்கட்சிகளுக்கு எச்சிரிக்கையொன்றை வெளியிட்டதையடுத்து சுமந்திரனின் தொடர்புடைய கருத்துகள் வெளியாகியுள்ளன.
சுமந்திரன் எச்சரிக்கை
இதன்படி, தங்களிடம் 2/3 பெரும்பான்மை இருப்பதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுவதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், “அதிகாரம் கெடுவிக்கும்; முழுமையான அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும்.” என அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
அத்தோடு, யாழ்ப்பாணத்தில் பெரும்பான்மையைப் பெறுவதற்கான ஜனாதிபதியின் கணக்கீட்டை கேள்விக்குட்படுத்திய சுமந்திரன், யாழ்ப்பாண மாநகர சபையில் 10/41 பெரும்பான்மை என்று ஜனாதிபதி கூறுவதில் அவரது கணிதத் தகைமை வெளிப்படுவதாகவும் சாடியுள்ளார்.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
