ஹர்த்தாலுக்குள் மறைந்திருக்கும் சுயநல அரசியல்: சுமந்திரனின் ரகசிய நகர்வு
தமிழர் அரசியல் என்ற பக்கத்தில் இருந்து எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) என்ற பெயர் மக்களால் புறக்கணிக்கப்பட்டு சில காலமாக எவ்வித அரசியல் தலையீடும் இன்றி காணாமலாக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும், கடந்த இரு நாட்களாக தமிழர் தரப்பு மாத்திரமின்றி தென்னிலங்கை தரப்பு அரசியல், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் என மீண்டும் சுமந்திரன் பேசுபொருளாக மாறியுள்ளார்.
காரணம், வடக்கு மற்றும் கிழக்கில் கடந்த திங்கட்கிழமை (18) இடம்பெற்ற கடையடைப்பு போராட்டம்தான்.
வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்கள் மற்றும் அதிகரித்த இராணுவ பிரசன்னம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக கடந்த 18 ஆம் திகதி வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு போராட்டத்திற்கு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழரசு கட்சியை வைத்து தனிநபர் ஒருவர் தன்னிச்சையாக முடிவெடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டதாக சில இடங்களில் கடையடைப்பு போராட்டமானது புறக்கணிக்கப்பட்ட போதும் சில இடங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் விளக்கமளித்த சுமந்திரன் இது தனிப்பட்ட ரீதியில் எனது அழைப்பு இல்லை என்ற அடிப்படையில் ஊடகங்களில் தெளிவுப்படுத்தி இருந்தார்.
இருப்பினும், இது ஏற்றக்கொள்ள கூடிய ஒரு பதிலாக இல்லை என பலதரப்பட்ட விமர்சனங்கள் வெளியாகி இருந்ததுடன் தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜெயசிங்க (Mahinda Jayasinghe) கடையடைப்பு தொடர்பிலும் மற்றும் சுமந்திரன் தொடர்பிலும் நேற்று (19) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இவ்வாறு, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பினும் அரசியல் வட்டாரத்தில் மிகவும் பேசுபொருளுக்கு உள்ளாக்கப்படாமல் காணாமலாக்கப்பட்டிருந்த சுமந்திரன் தொடர்ந்து இந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றார்.
இவ்வாறு அவர் மீண்டும் பேசுபொருளாக மாறுவதற்கும் அரசியல் களத்தில் மீண்டும் நுழைவதற்காகவும்தான் கடையடைப்பு என்ற விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக சுவாமி சங்கரானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை அவர் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழர் பிரதேசத்தில் இராணுவ பிரசன்னத்தை இல்லாமல் ஆக்குவதை தாண்டி எதிர்கால அரசியலுக்காகவும் தனிப்பட்ட அரசியல் இருப்புக்காகவும் இந்த கடையடைப்பு போராட்டத்தை சுமந்திரன் முன்னெடுத்ததாக நான் கருத்துகின்றேன்.
சுமந்திரன் என்பவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு புத்திஜீவி மற்றும் அறிவாளி அத்துடன் நல்ல ஆளுமையுள்ளவர்.
அப்படிப்பட்டவர் இதற்காக காலம் நேரம் என்பவற்றை முறையாக தீர்மானித்து அனைவரின் ஒத்துழைப்புடன் நடத்தி இருக்க வேண்டும்.
இருப்பினும், தமிழ் மக்கள் போராட கூடியவர்கள் அல்ல என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடையடைப்பு போராட்டம், சுமந்திரனின் அரசியல் எதிர்கால், தமிழர் தரப்பு அரசியல், தென்னிலங்கை அரசியல் மற்றும் பலதரப்பட்ட அரசியல் சார் விடயங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 1 நாள் முன்
