நான் எனது மூளையை உபயோகிக்கிறேன்: விக்கிக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன்!
”நான் மூளையை உபயோகித்துச் செயற்படுகின்றேன்” என்று விக்னேஸ்வரன் கூறியமைக்கு நன்றியைத் தெரிவிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.
சுமந்திரனுக்கு தமிழ்த் தேசிய உணர்வு இல்லை எனவும், அவர் மூளையை மாத்திரம் பாவித்து செயற்படுகின்றார் என விக்னேஸ்வரன் (C.V. Vigneswaran) அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) நேற்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த சுமந்திரனிடம், விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
என்னுடைய மூளை
அவர் மேலும் தெரிவிக்கையில், "விக்னேஸ்வரன் கூறுகின்ற விடயங்களுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை. ஆனால், என்னுடைய மூளையை உபயோகித்து நான் சிந்திக்கின்றேன் என்று அவர் கூறியமைக்கு என்னுடைய நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொள்கின்றேன்.

ஒரு ஆசிரியனாக தன்னுடைய மாணவர்கள் மூளையைத்தான் பாவித்து சிந்தித்துக் கூறுகின்றனர் என்று அவர் கண்டுபிடித்திருக்கின்ற கண்டுபிடிப்பு மிகவும் அற்புதமானது.
ஆனால், அவர் எதனைப் பாவித்துச் சிந்திக்கின்றார் என்று எனக்குத் தெரியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்