சுரேஷ் சலேவின் மருத்துவக் குழுவைச் சேர்ந்த 10 மருத்துவர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பானை
Sri Lanka Politician
Law and Order
Suresh Salley
By Pavi
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியக் குழுவில் (Medical Board) உள்ள 10 வைத்தியர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை விடக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பானை ஒக்டோபர் 06 ஆம் திகதி கொழும்பு நீதவான் பசன் அமரசேனவினால் விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்த மனு ஒன்றின் ஊடாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுரேஷ் சலே உடல் நல குறைவு காரணமாக தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

'போராட்டம்' திரைப்படத்திற்கு வலுச்சேர்ப்போம் : மக்களை அணிதிரளுமாறு ஈழத்தமிழர் திரைப்பட சங்கம் அறைகூவல்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்