கூகுளில் 20 ஆண்டுகளை நிறைவு செய்த சுந்தர் பிச்சை!
கூகுள்(Google) நிறுவனத்தில் 20 ஆண்டுகள் பணி நிறைவடைந்துள்ளதாக கூகுள் தலைமை செயற்திட்ட அதிகாரி(CEO of Google) சுந்தர் பிச்சை(Sundar Pichai) அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
கூகுளில் சேர்ந்த நாளில் இருந்து தனது வாழ்க்கை மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளதோடு பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் தனது தலைமுறையும் பல மாற்றங்களை கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன் தனக்கு வேலை மீதான காதலும் மற்றும் ஆர்வமும் மாறாமல் அப்படியே இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரையில் பிறந்திருந்தாலும் சென்னையில் இரண்டு அறைகள் மட்டுமே உள்ள வீட்டில் வசித்து எல்லோரையும் போல பள்ளிப்படிப்பை முடித்த நிலையில் கரக்பூர் ஐஐடியில் உலோகப்பொறியியலும் பின்னர் மேலாண்மைப் பட்டமும் பெற்றுள்ளார்.
தயாரிப்பு மேலாளர்
2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கூகுள் நிறுவனத்தில் தயாரிப்பு மேலாளர் (Product Manager) ஆக பணியில் அமர்ந்த சுந்தர் பிச்சையின் மேற்பார்வையின் கீழ் கூகுள் குரோம்(Chrome) மற்றும் ஆண்ட்ராய்டு(Android) ஆகியவை உருவாக்கப்பட்டன.
இதனுடன் கூகுளுக்கு வருமானம் ஈட்டித்தரும் கூகுள் தேடல்(Google search), வரைபடம்(Map), விளம்பரம்(Advertising) மற்றும் யூடியூப்(YouTube) உள்ளிட்ட தயாரிப்புகளிலும் சுந்தர்பிச்சையின் பங்களிப்பு பெரிதாக இருந்ததால் தலைமையின் கவனத்தை பெற்றார்.
கூகுளின் தாய் நிறுவனம்
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனத்தின்(Alphabet Inc) தலைவர்களாக இருந்த லாரி பேஜ்(Larry Page) மற்றும் செர்ஜி பிரின்(Sergey Brin) ஆகியோர் விலகிய நிலையில் 2019 ஆம் ஆண்டு சுந்தர் பிச்சை இரு நிறுவனங்களுக்கும் ஒரே தலைமை செயல் அதிகாரியாக பதவியை அலங்கரித்து வருகிறார்.
மேலும் உதவித்தொகை பெற்று வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பயின்ற சுந்தர் பிச்சை 2022 ஆம் ஆண்டு 226 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது ஆயிரத்து 854 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |