ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்த சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பினார்
புதிய இணைப்பு
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளார்.
க்ரூ-9 (Crew-9) பயணத்தில் நிக் ஹேக் (Nick Hague) மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்ஸாண்டர் கோர்புனோவ் (Aleksandr Gorbunov) ஆகியோருடன் சேர்ந்து சுனிதா மற்றும் புட்ச் பூமிக்குத் திரும்பினர்.
2025 மார்ச் 18 ஆம் திகதி, ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் புளோரிடா கடற்கரையில் உள்ள கடலில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
புன்னகையுடன் கைகளை அசைத்து
இலங்கை நேரப்படி மார்ச் 19 அதிகாலை சுமார் 3:27 மணிக்கு தரையிறங்கிய அவர்கள், 17 மணி நேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தனர்.
After 286 days in space, @Astro_Suni is finally home. 👏 pic.twitter.com/4GjNSDVCKb
— Rapid Response 47 (@RapidResponse47) March 18, 2025
தரையிறங்கிய பின்னர், சுனிதா வில்லியம்ஸ் முதலில் விண்கலத்திலிருந்து வெளியேறி, புன்னகையுடன் கைகளை அசைத்து வரவேற்பை ஏற்றார்.
பின்னர், வைத்திய பரிசோதனைகளுக்காக அவர்கள் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த நீண்ட பயணத்தில், சுனிதா மற்றும் புட்ச் சுமார் 900 மணி நேர ஆராய்ச்சி மற்றும் 150 அறிவியல் பரிசோதனைகளை ISS இல் மேற்கொண்டனர்.
286 நாட்களில், அவர்கள் பூமியை 4,576 முறை சுற்றி, 121 மில்லியன் மைல்களுக்கு மேல் பயணித்தனர். சுனிதாவின் இந்த சாதனை, விண்வெளி ஆய்வில் அவரது மகத்தான பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு
ஒன்பது மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) பூமியில் கால் பதிக்கவுள்ளா்ர்.
இந்த நிலையில், குறித்த நிகழ்வை தற்போது நாசா நேரலையாக ஒளிபரப்புகின்றது.
முதலாம் இணைப்பு
விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் பேரி வில்மோர்(Barry Wilmore) ஆகியோர் பூமிக்கு திரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த வருடம் ஆய்வு பணிக்காக சென்ற இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்டு தொழில்நுட்ப கோளாறு பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, 9 மாதங்களாக தங்கியிருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இருவரும் நாசா, ஸ்பேஸ்எக்ஸ் அனுப்பிய விண்கலத்தில் இன்று(18) பூமிக்கு திரும்புகின்றனர்.
நாசா நேரலை
அமெரிக்க நேரப்படி, நேற்று(17) இரவு 10.45 மணிக்கு க்ரூ டிராகன் விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து விடுக்கப்பட்டுள்ளது.
LIVE: @NASA_Astronauts Nick Hague, Suni Williams, Butch Wilmore, and cosmonaut Aleksandr Gorbunov are packing up and closing the hatches as #Crew9 prepares to depart from the @Space_Station. Crew-9 is scheduled to return to Earth on Tuesday, March 18. https://t.co/TpRlvLBVU1
— NASA (@NASA) March 18, 2025
இதனைத் தொடர்ந்து, இன்று(18) மாலை 5.57 மணிக்கு அமெரிக்காவின் புளோரிடா கடல் பகுதிக்கு விண்கலம் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாசா தனது எக்ஸ் பக்கத்தில் நேரலை செய்கிறமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்