கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை கடமையில் இருந்த மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற உயர்தரப் பரீட்சை கடமையின் போது மது போதையில் இருந்த குற்றச்சாட்டில் குறித்த பரீட்சை மேற்பார்வையாளர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வலயக் கல்வி பணிப்பாளருக்கு தகவல்
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரி மகா வித்தியாலயத்தில் கடமையில் இருந்த மேற்பார்வையாளர் ஒருவர் மதுபோதையில் இருந்தது தொடர்பாக வலயக் கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சை திணைக்கள அதிகாரிகள் மதுபோதையில் இருந்து பரீட்சை மேற்பார்வையாளரை அந்தப் பணியில் இருந்து நீக்கியதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |