அமெரிக்க அதிபர் தேர்தல் : டொனால்ட் ட்ரம்பிற்கு பெருகும் ஆதரவு
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசுக்கட்சி தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்களை தேர்ந்தெடுக்க கட்சிகள் தமது வேட்பாளர்களுக்கான தேர்தலை நடத்துவது வழமை.
அந்த வகையில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சிகள் தமது வேட்பாளரை தேர்வு செய்ய தற்போது தேர்தல்களை நடத்தி வருகின்றன.
குடியரசு கட்சி வேட்பாளருக்கான தேர்தல்
இந்த நிலையில் நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹெய்லி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இதில் 52.5 சதவிகித ஆதரவு பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்றார். அதேவேளை, 46.6 சதவிகித ஆதரவு பெற்று நிக்கி ஹெய்லி 2ம் இடம் பிடித்தார். இதன் மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் தேர்வில் டொனால்ட் டிரம்ப் முன்னிலையில் உள்ளார். இதன் மூலம் அதிபர் தேர்தலில் டிரம்ப் களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான தேர்தலில்
அதேவேளை, நியூ ஹம்ப்ஷர் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான தேர்தலில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |