சிறைப்பேருந்தில் ஏற்றப்பட்ட ஷிரந்தியை கண்டு கண்ணீர் சிந்திய ஆதரவாளர்கள்
By Dharu
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியும், நாட்டின் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்சவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
இன்று பிற்பகல் அவர் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டபோது, அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகப் பெருமளவிலான மக்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.
தொடர்ந்து, அவருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் பலத்த பாதுகாப்புடன் சிறைப்பேருந்தில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்தச் சந்தர்ப்பத்தில், அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் எமது ஊடகக் கமராக்களில் பதிவாகியிருந்தன...





| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |