வெளிநாட்டவர்களின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள்: ஆறு மாதத்தில் ஒடுக்க திட்டம்
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு 06 மாத காலத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மேல்மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் இருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர்களே இந்நாட்டில் குற்றச்செயல்களை முன்னெடுப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இந்நாட்டில் உள்ள பல குற்றவாளிகள் தற்போது காவல்துறையினர் பிடியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகள்
தென் மாகாணத்தில் பதிவாகும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் வெளிநாட்டில் இருந்து வந்த குற்றவாளிகளால் வழிநடத்தப்படுவதாகவும், இதுபோன்ற மூன்று பாரிய குற்றவாளிகள் ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தொழிலதிபர்களிடம் மிரட்டி பணம் பெறுபவர்கள் இருந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 14 மணி நேரம் முன்