பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல்

By Pavi Oct 19, 2026 11:31 AM GMT
Report

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் ஊடகச் சுதந்திரம், ஜனநாயகப் பொறுப்புக்கூறல் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதுடன், அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மக்களின் இறைமையையும் மீறக்கூடும் எனத் தெரிவித்து, சுதந்திர ஊடக இயக்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

சுதந்திர ஊடக இயக்கத்தினால் ஞாயிற்றுக்கிழமை (18) வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உத்தேச பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்ட ஏற்புடைமையைச் சவாலுக்கு உட்படுத்தி, சுதந்திர ஊடக இயக்கம் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

இன்று மாலை முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைக்கு

இன்று மாலை முதல் நாடு முழுவதும் எரிவாயு விநியோகம் வழமைக்கு

பாராளுமன்ற விவகார அமைச்சர் 

சுதந்திர ஊடக இயக்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களான உதய கலுபதிரண மற்றும் ஹனா இப்ராஹிம் ஆகியோரின் சார்பில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் | Supreme Court Against The Counter Terrorism Bill

சிரேஷ்ட சட்டத்தரணி லக்ஷான் டயஸ், சட்டத்தரணிகளான நிமன்சா மீட்டியகொட மற்றும் யசோதரா இல்லங்கசிங்க ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த மனுவை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

சட்டமா அதிபர், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

சட்டமூலத்தின் 3(1), 3(2) மற்றும் 9ஆம் உறுப்புரைகளின் கீழ் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதம் சார்ந்த வெளிப்பாடுகள் தெளிவற்ற வகையில் வரையறுக்கப்பட்டுள்ளமை ஊடகவியலாளர்களுக்குப் பாரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நியாயமான பொதுநலன் கருதி புலனாய்வுச் செய்தி அறிக்கையிடலில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள், இந்த ஏற்பாடுகளின் காரணமாக ஆயுள் தண்டனை மற்றும் 2 கோடி ரூபா அபராதம் உள்ளிட்ட பாரிய குற்றவியல் தண்டனைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உரிமை, கருத்துச் சுதந்திரம்

ஊடகத் தகவல் மூலங்களின் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதில் காணப்படும் குறைபாடுகளும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. சட்டமூலத்தின் 15ஆம் உறுப்புரையின் கீழ் தகவல்களை அறிவிக்கத் தவறுவது குற்றமாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் | Supreme Court Against The Counter Terrorism Bill

எனினும், நம்பகமான ஊடகத் தகவல் மூலங்களையும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவோரையும் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவில்லை என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

இதனால், பொதுமக்களின் நலன் கருதி உண்மைகளை வெளிக்கொணரும் புலனாய்வு ஊடகவியலாளர்கள் தமது தகவல் மூலங்களைப் பாதுகாப்பதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடுவதுடன், புலனாய்வு ஊடகவியல்துறையின் செயற்பாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும்.

அத்துடன், சட்டமூலத்தின் 19, 20, 24 மற்றும் 61ஆம் உறுப்புரைகள் தொடர்பிலும் மனுதாரர்கள் தமது எதிர்ப்புகளை முன்வைத்துள்ளனர்.

இந்த உறுப்புரைகளின் ஊடாக முப்படையினருக்கு சோதனையிடுதல் மற்றும் கைது செய்தல் தொடர்பில் விரிவான அதிகாரங்கள் வழங்கப்படுவதுடன், பாதுகாப்புச் செயலாளருக்குத் தடைசெய்யப்பட்ட பகுதிகளைப் பிரகடனப்படுத்துவதற்கும் அனுமதி வழங்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தேச சட்டமூலம்

இந்த ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், பொதுமக்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சம்பவங்களை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதற்கான வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்படக்கூடும் என மனுதாரர்கள் வாதிட்டுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சுதந்திர ஊடக இயக்கம் மனுத் தாக்கல் | Supreme Court Against The Counter Terrorism Bill

இதன் மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களைச் சேகரித்தல், அவற்றைச் சரிபார்த்தல் மற்றும் மக்களுக்கு வழங்குதல் ஆகிய ஊடகப் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், உத்தேச சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமத்துவத்திற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் மக்களின் இறைமை ஆகியவற்றைப் பாரதூரமாக மீறக்கூடும் என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஊடகச் சுதந்திரம் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறலைப் பாதிக்கக்கூடிய ஏற்பாடுகள் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் நாம் கவலை வெளியிடுகிறோம்.

இந்தக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, உத்தேச சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதுடன், சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மக்களின் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண்

இலங்கை நோக்கி வந்த விமானத்தில் ஆண் குழந்தை பெற்ற பணிப்பெண்

வெளிநாடொன்றில் திருப்பலியின்போது அறுந்து விழுந்த சிலுவை:அருட்தந்தை உயிரிழப்பு

வெளிநாடொன்றில் திருப்பலியின்போது அறுந்து விழுந்த சிலுவை:அருட்தந்தை உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Ilford, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கொழும்பு, இத்தாலி, Italy, சுவிஸ், Switzerland

12 Nov, 2021
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026