சுரேஷ் சலே குறித்து நீதிமன்றின் விசேட உத்தரவு
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலே குறித்த ஆணை இம்மாதம் 10ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே சார்பாக தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனு இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் இதனை தெரிவித்துள்ளது.
மருத்துவ நிபுணர்கள் குழுவின் முன்பாக முன்னிலைப்படுத்தி அறிக்கை கோருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிடக் கோரி சட்டமா அதிபரால் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டது.
நீதவான் நீதிமன்றம்
இந்நிலையில் இது குறித்த ஆணை, எதிர்வரும் 10ஆம் திகதி(10.06.2026) அன்று அறிவிக்கப்படும் என கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலதிக மன்றாடியர் நாயகம் ஜெனரல் திலீப பீரிஸ் விடுத்த கோரிக்கையைப் பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |