பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம்

Sri Lanka Prageeth Eknaligoda Law and Order Suresh Salley
By Shalini Balachandran Oct 17, 2026 01:08 AM GMT
Report

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் அதுகுறித்து தான் வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களைப் பார்க்காமல் தான் வழங்கிய தகவல் அறிக்கை தொடர்பில் சரியாக எதையும் சொல்ல முடியாது என இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலே சாட்சியமளித்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் வழக்கு விசாரணை நேற்று (16-10-2026) கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் உள்ள நிரந்தர மூவர் கொண்ட மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கில் முறைப்பாட்டு தரப்பு சாட்சியாக சாட்சியமளிக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சாலே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

எக்னெலிகொடவுடன் சகோதரர் போல் பழகினேன் – தமிழ்ச்செல்வன், ஞானவேலுக்குத் தெரியும்: முரளி சாட்சியம்

எக்னெலிகொடவுடன் சகோதரர் போல் பழகினேன் – தமிழ்ச்செல்வன், ஞானவேலுக்குத் தெரியும்: முரளி சாட்சியம்

முறைப்பாட்டு தரப்பு

முறைப்பாட்டு தரப்பு சாட்சிகளை வழிநடத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, சுரேஷ் சாலே இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பணிப்பாளராக எந்த காலத்தில் பணியாற்றினார் என வினவினார்.

அதற்கு 2012 ஆம் ஆண்டு இறுதி முதல் 2016 ஆம் ஆண்டு இறுதி வரை என சாலே பதிலளித்தார்.

பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம் | Suresh Sallay Testifies In Ekneligoda Case

அதனைத் தொடர்ந்து பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கிரிதலை கவச புலனாய்வு படையணி குறித்து தெரியுமா என வினவினார்.

அதற்கு பதிலளித்த சாலே, மூன்று நான்கு முறை சென்றுள்ளதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பிரகீத் எக்னெலிகொட தொடர்பான விசாரணைக்கு தகவல்களை வழங்கியது நினைவிருக்கிறதா என வினவினார்.

காவல்துறை சான்றிதழ் கோருவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

காவல்துறை சான்றிதழ் கோருவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

தகவல் அறிக்கை

விசாரணை ஒன்று நடைபெற்றதாக நினைவிருப்பதாகவும், அது தொடர்பில் தொலைபேசி தகவல் அறிக்கைகளை வழங்கியதாகவும் சாட்சியான சாலே கூறினார்.

மேலும் தெரிவித்த சலே, “ஐயா எனது 38 வருட சேவைக் காலத்தில் நான் சி.ஐ.டி.யுடன் பல சந்தர்ப்பங்களில் நெருக்கமாக பணியாற்றியுள்ளேன்.

பல வாக்குமூலங்களை வழங்கியுள்ளேன். பல ஆவணங்களை வழங்கியுள்ளேன். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நீதிமன்றமும் நடைபெற்றது.

பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம் | Suresh Sallay Testifies In Ekneligoda Case

அது தொடர்பான தகவல்களை ஒப்படைத்தேன் ஆனால் இந்த சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

எனவே இந்த சம்பவம் தொடர்பில் வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து வாக்குமூலத்தை பார்க்காமல் சரியாக சொல்ல முடியாது."

சாட்சியமளித்த பின்னர் சுரேஷ் சாலே மீண்டும் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சவூதியிலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

சவூதியிலுள்ள அமெரிக்கர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016