கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தை சுற்றிவளைக்கத் திட்டம்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லைத்தை நாளை (25) சுற்றிவளைக்க சிலர் திட்டமிட்டுள்ளனர்.
இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் ஆதரவு வழங்கியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா சற்றுமுன் சபையில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
" காலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்தித்தேன். அதன்போது நாளை இடம்பெறவுள்ள செயற்குழுக் கூட்டத்திற்கு தன்னால் பங்குபற்ற முடியாது என்றும் கொழும்பிலுள்ள தனது இல்லத்தை ஒருசிலர் சுற்றிவளைக்க திட்டமிட்டுள்ளதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தார்.
அதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பங்கும் உள்ளதாக அவர் தெரிவித்தார். இது பாரதூரமான பிரச்சினையாகும்.
நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டை

கஜேந்திர குமார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்.
எனவே ஒவ்வொருவரும் நினைத்தபடி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டை சுற்றிவளைக்க இடமளிக்க முடியாது. அவ்வாறானவொரு திட்டமிருந்தால் பாதுகாப்பு பிரிவினருக்கு முதலில் அறிவிக்க வேண்டியது அவசியம்.
ஆகவே அவருக்கும் அவரது இல்லத்துக்குமான பாதுகாப்பை பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.” என அவர் மேலும் தெரிவித்தார்.