உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - குண்டு வைக்கத் தூண்டியவர்கள் யார்? எழுப்பப்படும் கேள்வி
Maithripala Sirisena
Gnanasara Thero
Easter
By Vasanth
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் குண்டை வெடிக்கச் செய்தது சஹ்ரான் என்றாலும் குண்டு வைக்கத் தூண்டியவர்கள் யார் என்பதே அவசியமாக உள்ளதென இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எனவே தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தத் தூண்டியது யார் என்ற கேள்விக்கே பதில் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரையில் குற்றவாளிகள் யார் என்பது வௌியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கூறுவது போல விசாரணை அறிக்கை பரிந்துரையில் குற்றவாளிகள் அல்லாத நிலை இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
வேறு நபர்கள் குற்றவாளிகளாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்த குண்டை போட்டது மைத்திரிபால சிறிசேனவோ ஞானசார தேரரோ இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி