QR குறியீட்டில் மோசடி : எரிபொருள் பெற்ற சந்தேக நபர் கைது
நிட்டம்புவவில் ஒரு பெண்ணின் காரில் உள்ள எரிபொருள் QR குறியீட்டை மீறி, காரின் தரவுகளுக்கமைய ஒரு புதிய QR குறியீட்டை உருவாக்கி எரிபொருள் பெற்ற நபரை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது.
1919 எண் வழியாகப் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) புகார் அளித்திருந்தது.
குற்றப் புலனாய்வுத் துறையால் கைது
அதன்படி, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) கீழ் உள்ள கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் இணைய கண்காணிப்பு புலனாய்வுப் பிரிவு சந்தேக நபர் குறித்து விசாரணைகளை நடத்தியுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர் என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரிபொருள் வழங்கியவர்கள் மீதும் விசாரணை
இந்த சட்டவிரோத QR குறியீட்டிற்கு எரிபொருள் வழங்கியவர்கள் மீதும் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், இந்த வழியில் QR குறியீடுகளை 'மீறி' செயல்படுபவர்கள் மீது சிறப்பு விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |