ஹோர்முஸ் நீரிணை திறப்பு! பகைமையற்ற கப்பல்களுக்கு ஈரான் பச்சைக்கொடி
பல தசாப்தங்களில் இல்லாத மிகப்பெரிய உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஹோர்முஸ் நீர்வழிப்பாதை வழியாக ‘பகைமையற்ற’ (non-hostile) கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்லலாம் என்று ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈரான் வெளியுறவு அமைச்சகம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கும், சர்வதேச கடல் அமைப்பு (IMO) உறுப்பு நாடுகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டடுள்ளது.
இது தொடர்பில் நேற்று(24.03.2026) வெளியிடப்பட்ட அறிக்கையில், “பகைமையற்ற கப்பல்கள் ஈரானிய அதிகாரிகளுடன் முன்னதாக ஒருங்கிணைப்பு செய்து கொண்டு, ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடாமல், பாதுகாப்பு விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்கினால் பாதுகாப்பான பயணத்தைப் பெறலாம்” என்று கூறப்பட்டுள்ளது.
ஈரானின் தெளிவுபடுத்தல்
எனினும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கப்பல்கள் இந்த அனுமதிக்கு உட்படாது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. அவை பகைமையான கப்பல்களாகக் கருதப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு வழக்கமாக கடந்து செல்லும் அந்த நீர்வழிப்பாதையில், கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கு என்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது குறித்து ஈரான் அந்த அறிக்கைகளில் விரிவாகக் கூறவில்லை.
இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை தெஹ்ரான் முன்னர் மறுத்திருந்தபோதிலும், ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ள நிலையில், ஈரானின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு நாளும் குறைந்த எண்ணிக்கையிலான கப்பல்கள் இந்த நீர்வழிப்பாதை வழியாகச் சென்றாலும், பெப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்குவதற்கு முன்பு இருந்த அளவுகளில் ஒரு சிறு பகுதியாகவே போக்குவரத்து உள்ளது.
விண்ட்வார்ட் என்ற கடல்சார் புலனாய்வு நிறுவனத்தின்படி, மோதலுக்கு முன்பு தினசரி சராசரியாக 120 கப்பல்கள் அந்த நீர்வழியைக் கடந்து சென்ற நிலையில், கடந்த திங்களன்று ஐந்து கப்பல்கள் மட்டுமே அவற்றின் தானியங்கி அடையாள அமைப்புகள் மூலம் கண்காணிக்கப்பட்டன என தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 23 மணி நேரம் முன்