திருகோணமலையில் வெடிபொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
திருகோணமலை - மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து டைனமைட் வெடி பொருட்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு காவல்துறையினரால் நேற்று வியாழக்கிழமை (01) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது டைனமைட் வெடி பொருளுக்கு பயன்படுத்தபடும் டெட்டனேட்டர் குச்சிகள் 23 ,வெடிபொருள் மருந்து, ஈயத் துண்டுகள், வயர்,நாட்டுத் துப்பாக்கி குழல் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரின் வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது மேற்படி வெடிபொருட்களுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மூதூர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் , இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 7 மணி நேரம் முன்