காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட தெகிவளை துப்பாக்கிதாரி
தெகிவளை (Dehiwala ) பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேகநபரான துப்பாக்கிதாரி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை (25) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கஹதுடுவ, பஹலகம, கெதல்லோவிட பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றை காவல்துறையினர் விசேட அதிரடிப் படையினர் சோதனையிட்டனர்.
மேலதிக விசாரணை
அப்போது, அங்கு மறைந்திருந்த சந்தேகநபர் விசேட அதிரடிப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
விசேட அதிரடிப் படை அதிகாரிகளுக்கும் சந்தேகநபருக்கும் இடையிலான பரஸ்பர துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, சந்தேகநபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த விசேட அதிரடிப் படை உறுப்பினர் ஒருவர் களுபோவில பயிற்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உயிரிழந்த சந்தேகநபரின் உடல் மேலதிக விசாரணைகளுக்காக வேதர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
