வாகன மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது
Sri Lanka Police
Crime Branch Criminal Investigation Department
Arrest
By Abi
பதிவு சான்றிதழ் இல்லாத வாகனங்களை வைத்திருந்த மூன்று சந்தேக நபர்களை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுனர் கைது செய்துள்ளனர்.
போலி ஆவணங்களைத் தயாரித்து வாகனக் கடத்தலில் ஈடுபட்ட ஒரு சந்தேக நபர் குறித்து அப்பிரிவு நடத்திய விசாரணையின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அவர்களிடம் இருந்த 3 கார்கள், 2 ஜீப்புகள், ஒரு லொறி மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை காவல்துறையின் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.
மீகாவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தானை மற்றும் மீகாவத்தை பகுதிகளைச் சேர்ந்த 21, 39 மற்றும் 44 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவுனர் முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
6 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி