தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இனவாதத்தைத் தூண்டும் : சுமந்திரன் விளக்கம்
M A Sumanthiran
Sri Lanka Politician
Election
Sri Lanka Presidential Election 2024
By Kathirpriya
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (15) நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என முன்னைய காலங்களிலும் முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
குமார் பொன்னம்பலம், சிவாஜிலிங்கம் ஆகியோர் போட்டியிட்டிருக்கிறார்கள். அதற்கு தமிழ் மக்கள் கொடுத்த ஆதரவு எப்படியாக இருந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்." என்றார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மதிய நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி