கடமை தவறிய இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம்!
கடமை தவறிய குற்றச்சாட்டின் கீழ் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் வியாபாரியான 'சமன் கொல்ல' என்பவரின் வீட்டில் அண்மையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
பணி இடைநீக்கத்திற்கு காரணம்
இது தொடர்பில் காவல்துறை அவசர பிரிவுக்கு கிடைத்த தகவல் தொடர்பில் காவல்துறை தலைமையக பரிசோதகருக்கு அறிவுறுத்தாமை இந்த பணி இடைநீக்கத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் அம்பலாங்கொடை காவல் நிலையத்தில் தொலைபேசி இயக்குனராகவும், கணனி செயற்பாட்டாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயம் தொடர்பில் இரு அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |