ஈஸ்டர் தாக்குதல் - கோட்டாபய நியமித்த புதிய குழுவால் எழுந்தது சந்தேகம்
Gotabhaya Rajapaksa
Easter
Chamal Rajapaksa
By Vasanth
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்வதற்காக புதிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய நியமித்துள்ளார். இவ்வாறு புதிய குழு நியமனமானது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கத்தோலிக்க ஆயர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் தலைவர் வண வின்சன்ட் ஜே பெர்ணாந்து இதனை குறிப்பிட்டார்.
பதுளை ஆயர் இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என குறித்த அறிக்கையை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபக்குழுவின் தலைவர் அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.