நேட்டோ அமைப்பில் உத்தியோகபூர்வமாக இணைந்தது சுவீடன்
நேட்டோ அமைப்பில் சுவீடன் நேற்று (07) உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேட்டோவின் 32ஆவது அங்கத்துவ நாடாக சுவீடன் விளங்குகின்றது.
நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்திருந்தது.
சுவீடன் பிரதமர்
எனினும், நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான சம்மதத்தை தெரிவிப்பதற்கு துருக்கியும் ஹங்கேரியும் தயங்கிவந்தன.
பின்னர் இவ்விரு நாடுகளும் தமது சம்மத்தை தெரிவித்த நிலையில், நேட்டோவில் சுவீடன் இணைந்துகொண்டது.
நேட்டோவில் சுவீடன் இணைந்ததை வரவேற்றுள்ள சுவீடன் பிரதமர் ஊல்வ் கிறிஸ்டேர்சன், இது சுதந்திரத்துக்கான ஒரு வெற்றி எனவும் தெரிவித்துள்ளார்
Sweden is now a NATO member. Thank you all Allies for welcoming us as the 32nd member. We will strive for unity, solidarity and burden-sharing, and will fully adhere to the Washington Treaty values: freedom, democracy, individual liberty and the rule of law. Stronger together.
— SwedishPM (@SwedishPM) March 7, 2024
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |