சுவீடனில் துப்பாக்கி சூடு :மூவர் பலி பலர் காயம்
சுவீடன்(sweden) நாட்டின் உப்சாலா நகரில் நேற்று(29) நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
உப்சாலா நகரின் வக்சலா சதுக்கத்தில் உள்ள சலூன்கடையில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு சப்தத்தை கேட்டு காவல்துறையினருக்குஅங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்தனர்.
ஐந்து முறை துப்பாக்கிச்சூடு
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்து வருகின்றனர். ஐந்து முறை துப்பாக்கிச்சூடு சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் காவல்துறையிடம் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூட்டை நடத்திய சந்தேகத்திற்குரிய குற்றவாளி குற்றம் நடந்த இடத்திலிருந்து மின்சார ஸ்கூட்டரில் தப்பிச் சென்றதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கான நோக்கம்
தாக்குதலுக்கான நோக்கம் குறித்து உடனடி அறிகுறிகள் எதுவும் இல்லை, மேலும் சந்தேகத்திற்குரிய குற்றவாளி பற்றிய விவரங்களை காவல்துறை அறிக்கையில் வழங்கவில்லை.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
