சுவிஸ் சுக் சிறி சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா
சுவிஸ் சுக் சிறி சித்தி விநாயகர் ஆலய புனராவர்த்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நாளை மறுதினம் (12) இடம்பெறவுள்ளது .
சுவிஸ் சுக் சிறி சித்திவிநாயகர் ஆலயத்தில் பெப்ரவரி 8ஆம் திகதி முதல் புனராவர்த்தன மஹா கும்பாபிஷேகத்திற்கான கிரிகைகள் ஆரம்பித்து இடம்பெற்று வருகின்றது.
கும்பாபிஷேக பிரதிஸ்டா குரு சிவசிறி சோமாஸ் கந்தக்குருக்கள் மற்றும் தேவஸ்தான குரு சிவசிறிபாஸ்கரக்குருக்கள் ஆகியோரின் தலைமையில் , இலங்கையில் இருந்து சென்றுள்ள கலாநிதி சிவசிறி ஐயப்பதாஸா குருக்கள் , மற்றும் சிறிஹரக்குருக்கள் ஆகியோரின் வழிகாட்டலிலும் கும்பாபிஷேக கிரிகைகள் இடம்பெற்று வருகின்றன .
மஹா கும்பாபிஷேகம்
நாளை (11) இறையருவங்களுக்கு பால்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து , நாளைமறுதினம் (12) மஹா கும்பாபிஷேகம் இடம்பெற திருவருள் கூடியுள்ளதாக ஆலய புனராவர்த்தன குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அனைத்து நிகழ்வுகளையும் ஆலய பரிபாலன சபையினரும் , ஆலய புனராவர்த்தன குழுவினரும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளதாகவும், அனைத்து அடியவர்களும் கும்பாபிஷேக கிரிகைகளில் கலந்துகொண்டு , இஷ்ட சித்திகளைப் பெற்றுய்யும் வண்ணமும் வேண்டப்படுகிறீர்கள்.





