வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் யாழ். பொலிஸ் நிலையத்தில் சரண்
யாழ்ப்பாணம் குருநகரில் நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஜெரன் என்ற இளைஞர் உயிரிழந்ததுடன் இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், பிரதான சந்தேக நபர்களான பாசையூர் கெமியின் சகோதரர்களை தேடி தீவகம் உள்பட பல இடங்களில் தேடுதல் நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் பிரதான சந்தேக நபர் உட்பட 6 பேர் நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். எனினும் சந்தேகநபர்களான சகோதரர்களில் ஒருவர் இன்று சரணடைந்தவர்களில் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேர் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.