மனைவி மற்றும் மகள் மீது வாள்வெட்டு தாக்குதல்! பின்னணியில் கணவன் - யாழில் சம்பவம்
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி J/432 கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மனைவியும், மகளும் கணவனின் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (15) நண்பகல் இடம்பெற்றுள்ளது.
தாய் மற்றும் மகள் ஆகியோர் வெற்றிலைக்கேணியில் உள்ள தமது உறவினர்கள் வீட்டில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்பத்தகராறு காரணமாக மனைவி மற்றும் மகள் மீது கணவன் இவ்வாறு வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மதுபோதையில் கணவன்
அத்துடன் சம்பவம் இடம்பெற்ற போது கணவன் மது அருந்திய நிலையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தை தொடர்ந்து படுகாயமடைந்த தாயும், மகளும் கிளிநோச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் சந்தேகநபர் அப்பகுதி மக்களால் மடக்கி பிடித்து கட்டிப்போடப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மருதங்கேணிப் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

