வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்பு - யாழில் இருவர் கைது
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ் - அச்சுவேலி நகரில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் இருவர் அச்சுவேலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு குழுக்களுக்கிடையில் இருந்துவரும் முறுகல் காரணமாக அச்சுவேலி - மகிழடி வைரவர் கோவிலடியில் நேற்று மாலை இளைஞன் ஒருவன் மீது துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
வாள்வெட்டுத் தாக்குதல்

இந்தத் தாக்குதலில் பாரதி வீதி பத்தமேனியைச் சேர்ந்த 27 வயதான இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டிருந்த அச்சுவேலி காவல்துறையினர், சந்தேகத்தின் அடிப்படையில் குட்டியப்புலம் பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதுடன், மேலும் சிலரை தேடிவருவதாக கூறியுள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி