யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல் (படங்கள்)
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
சம்பவம் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக இன்றிரவு இடம்பெற்றுள்ளது.
47 வயதுடைய இருவர் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளதுடன், குறித்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின் காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன், மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


