அதிகரிக்கும் கொரோனா தொற்று இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படும் சிட்னி நகரம்
கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரம் மேலும் இரண்டு வாரங்களுக்கு முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட மத்திய மற்றும் கிழக்கு பிராந்தியங்களுக்கு ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிட்னியில் 80 க்கும் மேற்பட்டவர்களுக்கு டெல்டா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அவுஸ்ரேலிய அரசு தடுப்பூசி திட்டத்தை மெதுவாக செயல்படுத்தியதற்காக விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதுவரை, அவுஸ்ரேலியாவின் வயது வந்தோரில் 3% பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர், மேலும் 25% அவுஸ்ரேலியர்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போடப்பட்டிருந்தால் மூடல் அவசியமில்லை என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.