சிரியாவில் முன்னேறும் கிளர்ச்சிபடை : தப்பி ஓடினாரா ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்...!
சிரியாவில் கிளர்ச்சிப்படைகள் தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டதாக தகவல்கள் வெளிவந்தபோதிலும் சிரிய ஜனாதிபதி அலுவலகம் அதனை மறுத்துள்ளது.
இதேவேளை சிரியாவின் உள்துறை அமைச்சர், அரசாங்கத்தின் படைகள் நாட்டின் தலைநகரைச் சுற்றி "மிகவும் பலமான" இராணுவ வேலியை உருவாக்கியுள்ளதாகவும், அதன் வழியாக யாரும் செல்ல முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
டமாஸ்கஸில் இருந்து அரசு தொலைக்காட்சியில் பேசிய முகமது அல்-ரஹ்மூன் ,"டமாஸ்கஸ் மற்றும் அதன் கிராமப்புறங்களின் எல்லைகளில் மிகவும் வலுவான பாதுகாப்பு மற்றும் இராணுவ வேலி உள்ளது, மேலும் ஆயுதம் ஏந்திய இந்த தற்காப்புக் கோட்டை யாரும் ஊடுருவ முடியாது என தெரிவித்தார்.
சிரிய தலைநகரம் "விரைவில் வீழ்ச்சியடையும்
இதனிடையே சிரிய எதிர்ப்பிற்கு ஆதரவான அமெரிக்காவை தளமாகக் கொண்ட சிரிய அவசரகால பணிக்குழு (SETF), சிரிய தலைநகரம் "விரைவில் வீழ்ச்சியடையும்" என்று தெரிவித்தது.
அந்த பணிக்குழுவின் இயக்குனர் Mouaz Moustafa தெரிவிக்கையில், டமாஸ்கஸ் விரைவில் கிளர்ச்சிப் படைகளிடம் வீழ்ந்துவிடும், மேலும் நகரம் திறம்பட சுற்றி வளைக்கப்படும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவலர் படையின் உறுப்பினர்கள் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர் ரஷ்ய கடற்படை சொத்துகளும் நாட்டை விட்டு வெளியேறுகின்றன ரஷ்யா மற்றும் ஈரான் இரண்டும் சிரியாவின் முக்கிய கூட்டாளிகள் மற்றும் உள்நாட்டுப் போர் முழுவதும் இராணுவ ஆதரவை வழங்கியுள்ளன
நாட்டில் என்ன நடைபெறுகிறது
இதேவேளை சிரிய தலைநகரில் உள்ள மக்கள் நாட்டில் என்ன நடைபெறுகிறது என்பதை அறியாதவர்களாக உள்ளனர். பல கடைகள் மூடப்படுவதாகவும், பொருட்கள் குறைவாக உள்ளதாகவும், ஏடிஎம்களில் பணம் இல்லை என்றும் ஒருவர் தெரிவித்தார். "என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாது," என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே ஈராக்கிற்கும் சிரியாவிற்கும் இடையிலான எல்லை நகரமான அல்-கைமின் மேயர், சுமார் 2,000 சிரிய துருப்புக்கள் ஈராக் எல்லையைத் தாண்டி தஞ்சம் புகுந்துள்ளதாக தெரிவித்தார். துருப்புக்களில் சிலர் காயமடைந்து தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக துர்கி அல்-மஹ்லாவி ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |