தமிழரசு கட்சியின் நகரசபை உறுப்பினர் ராஜினாமா!
தமிழரசுக்கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம் நாளையதினம் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சியூடாக வவுனியா நகரவட்டாரத்தில் நேரடியாக போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தேன்.
அந்தவகையில் வெற்றிபெற்றவர்கள் தமது பதவிக்காலத்தின் இருவருடங்களை மேலதிக வேட்பாளர்களாக போட்டியிட்ட நபர்களுக்கு வழங்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சி தீர்மானித்திருந்தது.
அந்த வகையில் எனது பதவிக்காலத்தின் இறுதிவருடத்தினை ஏனையவர்களிற்கு வழங்குவதாக நான் அன்று வாக்குறுதியளித்திருந்தேன்
அதற்கமைய அவர்களிற்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்குடன் எனது பதவியினை ராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளேன். அது தொடர்பான கடிதத்தினை வவுனியா தேர்தல் திணைக்களத்திற்கு நாளையதினம் உத்தியோகபூர்வமாக வழங்கவுள்ளேன்.
தேர்தல் திணைக்களத்தால் எனது உறுப்புரிமை உத்தியோகபூர்மாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவித்தல் கிடைக்கு வரை எனது வட்டாரத்தில் என்னால் முன்னெடுக்கப்பட்டுவரும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச்செல்வேன்.
இதுவரை காலமும் எனது பணிக்கு பக்கபலமாக இருந்து ஒத்தாசை புரிந்த நகரசபை தவிசாளர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள், வாக்காளப்பெருமக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.