அனைத்தையும் நீங்களே பொறுப்பேருங்கள் - அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு
நாடு முழுவதும் துப்பாக்கி ஏந்தியும், சோதனை நடத்தியும் நுகர்வோர் சந்தையில் தேவையான அளவு அரிசியை வாங்க முடியவில்லை என்றால் அதற்கு தற்போதைய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.
அரிசி மீதான 65 ரூபா வரியை 20 ரூபாவாக அரசாங்கம் குறைத்தால் அரிசியை இறக்குமதி செய்யத் தயார் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கீரி சம்பா கிலோ ரூ.225 ஆக உயர்ந்துள்ளது. வரி குறைக்கப்பட்டால் இந்தியாவில் இருந்து கீரி சம்பா, பொன்னி சம்பாவை தட்டுப்பாடு இன்றி இறக்குமதி செய்து ரூ.130-135க்குள் செலுத்த முடியும் என அத்தியாவசிய உணவுப் பொருள்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
தற்போது நிலவும் உர நெருக்கடி காரணமாக இந்த டிசம்பர் மாதம் முதல் நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது
அரிசி நெருக்கடியை போக்க அரிசி இறக்குமதியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.