தலிபானை கூட முடிவிற்கு கொண்டு வர முடியாத அமெரிக்கா விடுதலைப்புலிகளை அழித்த எம்மை குற்றம் சுமத்துகின்றது!
உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பான விடுதலைப்புலிகளை சிறிலங்கா இல்லாதொழித்ததை அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் குற்றமாக கருதுகின்றன என சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாம் விடுதலைப்புலிகளை அழித்தமையை குற்றமாகக் கருதும் அமெரிக்கா தலிபான் அமைப்பை கூட முடிவிற்கு கொண்டு வர முடியாமல் தள்ளாடுகிறது எனவும் விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவை விமர்சித்த வீரசேகர
ஆகவே தலிபான் அமைப்பை கூட முடிவுக்கு கொண்டு வர முடியாமல் தள்ளாடும் அமெரிக்கா, உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப்புலிகளை இல்லாதொழித்ததை குற்றமாக கருதுவது வேடிக்கையாகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
வல்லரசே தடுமாறும் நிலையில், நாங்கள் உலகில் பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை முடிவிற்கு கொண்டு வந்தோம். நாட்டுக்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதுஎனவும் தெரிவித்துள்ளார்.
