அமெரிக்காவுக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவருக்கு தலிபான்கள் கொடுத்த கொரூரமான தண்டனை
அமெரிக்காவிட்டுச் சென்ற இராணுவ ஹெலிகொப்டரில் அமெரிக்க அதிகாரிகளுக்கு மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வந்த ஆப்கன் நபரை கொன்று அவரது உடலை தொங்கவிட்டவாறு கந்தகார் நகரில் தலிபான்கள் ரோந்து சென்றமை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தங்களது விமானப்படை என தலைப்பு இட்டு இந்த காட்சியை தலிபான்கள் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
காபூலில் தாங்கள் விட்டுவிட்டு வந்த இராணுவ விமானங்கள் மற்றும் தளபாடங்களை தலிபான்களால் காட்சிப் பொருளாக மட்டுமே வைக்க முடியும், அவற்றை அவர்களால் இயக்க முடியாது என்று அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜோன் கெர்பி முன்னதாக கூறியது இதன் மூலம் பொய்த்துப் போய் விட்டதை தலிபான்கள் வெளியிட்ட வீடியோ காட்சி உறுதிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
இதனிடையே, திகிலூட்டும் வகையில் இருக்கும் இந்த வீடியோ, ஆப்கன் விவகாரத்தில் அதிபர் ஜோ பைடனின் படுதோல்வியை உறுதி செய்வதாக குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட்டர் டெட் குரூஸ், டுவிட் செய்துள்ளார்.
அமெரிக்காவின் Blackhawk ஹெலிகொப்டரில் ஒரு மனித உடல் தொங்கும் காட்சி துயரமானதும், கற்பனைக்கு எட்டாததுமாகும் என அவர் விமர்சித்துள்ளார்.