தேர்தல் ஆணையத்தை கலைத்த தலிபான் அரசு
ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையத்தை தலிபான்கள் கலைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலிபான் அரசு தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் புகார் ஆணையம் ஆகிய இரு அமைப்புகளையும் கலைத்துள்ளது.
"நாட்டின் தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையமும், தேர்தல் புகார் ஆணையமும் கலைக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழ்நிலையில் இது தேவையற்ற அமைப்புகள்.
எதிர்காலத்தில் இந்த அமைப்புகள் தேவைப்பட்டால் அப்போது அதை தலிபான்கள் அரசு மீண்டும் கொண்டு வரும்" என தலீபான்கள் அரசின் செய்தித்தொடர்பாளர் பிலால் கரீமி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலிபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.