சுட்டுக்கொன்றவரை கிரேனில் தொங்கவிட்ட தலிபான்கள் -ஆப்கானில் கடும் அச்சத்தில் மக்கள்
people
afghanistan
taliban
By Sumithiran
ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரில் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாகவும், அவர்களின் உடல்களை பொது இடங்களில் தொங்கவிட்டதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
மரணதண்டனை மற்றும் உடல் உறுப்புக்களை வெட்டுதல் போன்ற தீவிர தண்டனைகள் மீண்டும் தொடரும் என்று ஒரு பிரபல தலிபான் அதிகாரி எச்சரித்த ஒரு நாள் கழித்து இந்த கொடூரமான காட்சி வந்தது.
ஹெராட் நகரில் உள்ள மைய சதுக்கத்திற்கு, உயிரிழந்த நான்கு பேரின் உடல்களை தலிபான் அமைப்பினர் எடுத்து வந்தனர். பின், அதிலிருந்த ஒரு உடலை மட்டும், அவர்கள் ராட்சத கிரேனில் கட்டி தொங்கவிட்டனர்.மீதமுள்ள மூன்று உடல்களும் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
மீண்டும் கொடிய தண்டனைகளை தலிபான்கள் அமுல்படுத்துவதால், இந்த காட்சியைப் பார்த்த மக்கள் பீதியடைந்துள்ளனர்.