கணவன், பிள்ளைகள் முன்னால் கர்ப்பிணி பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற தலிபான்கள்
pregnant
kill
afghanistan
taliban
By Jaso
ஆப்கானில் ஆறுமாத கர்ப்பிணியான பொலிஸ் அதிகாரி பானு நிகாராவை அவரது குடும்பத்தினரின் கண்முன்னேயே தலிபான்கள் சுட்டுக் கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
Ghor மாகாணத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஆப்கான் காவல்துறையில் பணிபுரியும் பானு நிகாரா என்ற கர்ப்பிணியை அவரது குழந்தைகள் மற்றும் கணவர் கண் முன்னேயே தலிபான்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.
பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று தாலிபான்கள் உறுதி அளித்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இதனிடையே, அந்த கர்ப்பினி பொலிஸ் அதிகாரியை தலிபான்கள் கொல்லவில்லை என்றும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் Zabiullah Mujaheed தெரிவித்துள்ளார்.