பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற அணிவகுத்து நிற்கும் தலிபான்கள்
ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணத்தின் வெளியே தலிபான் இராணுவ வாகனங்கள் நிற்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
தேசிய கிளர்ச்சிப் படையினரின் வசம் இருந்த பஞ்ச்ஷிர் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றியதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் தலிபான்களின் முற்றுகையைத் தடுத்து நிறுத்திவிட்டதாக தெரிவித்துள்ள போராளி குழுவினரின் தலைவரும் முன்னாள் துணை ஜனாதிபதியுமான அம்ருலே சாலே தாங்கள் இக்கட்டான சூழலில் உள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன் தாம் ஒருபோதும் சரணடையப்போவதில்லை எனவும் ஆப்கானுக்காக நிமிர்ந்து நிற்கப்போவதாகவும் அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பஞ்ச்ஷிர் மாகாணம் அருகே கவச வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் வீடியோவை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.
A video message sent to us @BBCWorld from one of the leaders of the anti-Taliban resistance, fmr VP @AmrullahSaleh2 who says they're under attack from terrorists and points the finger of blame at Pakistan. Pakistan of course deny they support Taliban forces #Panjshir #Afghanistan pic.twitter.com/w3e6GnrRXi
— Yalda Hakim (@BBCYaldaHakim) September 3, 2021