பாகிஸ்தானிடமிருந்து கைப்பற்றிய டாங்கிகளுடன் வலம்வரும் தாலிபான்கள் :வைரலாகும் காணொளி
பாகிஸ்தான் இராணுவத்திடம் இருந்து கைப்பற்றிய பீரங்கிகளை ஆப்கானிஸ்தான் தெருக்களில் தாலிபான்கள் ஓட்டிச் சென்ற காணொளி வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் தாலிபான்களுக்கும் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் கடந்த வாரம் எல்லையில் ஏற்பட்ட மோதல் நேற்று மாலை, 48 மணி நேர சண்டை நிறுத்தம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் பாகிஸ்தானுடனான சண்டையின் போது ஆயுதங்கள் மற்றும் டாங்கிகளை கைப்பற்றியதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபுல்லா முஜாஹித் முன்னதாக தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் இராணுவ தளங்களை அழித்ததாகவும் ஆப்கானிஸ்தான் கூறியது.
ஆப்கானின் உரிமை கோரலும் பாகிஸ்தானின் மறுப்பும்
இதேவேளை, ஆப்கானிஸ்தான் கூற்றை பாகிஸ்தான் மறுத்துள்ளது. காணொளியில் காணப்படும் டாங்கிகள் தங்களுக்கு சொந்தமானவை அல்ல என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர், தாலிபான்கள் எங்கிருந்தோ மலிவாக வாங்கிய டாங்கிகளைக் காட்சிப்படுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.
This tank was pakistani which is now captured by afganistan army. Go ahead afganistan heros pic.twitter.com/5G4CmgTMjA
— ॐ Er Prince Raj 🚩 (@PrinceRaj628) October 16, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
