உலக நாடுகளுக்கு தலிபான் விடுத்துள்ள அறிவிப்பு
ஆப்கானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தலிபான்கள் அனைத்து நாடுகளுடனும் சுமுகமான நட்புறவு கொள்ள விரும்புவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து காபூலில் செய்தியாளர்களை சந்தித்த தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜாபியுல்லா மஜாஹித்,
புதிய அரசு வெளியுறவுக் கொள்கையின்படி சுமுக உறவையே நாடுவதாகக் கூறினார். எந்த வெளிநாட்டு தூதரக வளாகத்திலும் தலிபான்கள் நுழைய மாட்டார்கள் என்றும் அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நட்பு நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தலிபானுடன் பேச்சு நடத்த வருமாறு அவர் அழைப்பு விடுத்தார்.அமெரிக்கர்கள் 31 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தலிபான் அறிவித்துள்ளது.
பஞ்ச்ஷீர் பகுதியில் தலிபானை எதிர்த்து கடுமையாகப் போரிட்டு வரும் படைகள் சரண் அடையுமாறும் தலிபான் எச்சரித்துள்ளது.அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் தலிபான் அறிவித்துள்ளது.