நடிகையுடன் பேசியது உண்மையே - ஒத்துக் கொண்டார் அமைச்சர் சரத்வீரசேகர
actress
sarath weerasekara
talking
By Jaso
தற்போதைய கொரோனா நிலைமையை உதாசீனம் கொழும்பு ஹோட்டலொன்றில் பிறந்தநாள் விருந்து வைத்த நடிகை பியூமி ஹன்சமாலி உள்ளிட்டவர்களை தனிமைப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தலுக்காக பேருந்தில் நடிகை பியூமி ஹன்சமாலி உள்ளிட்ட குழுவினர் பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த போது அவர்களுடன் தொலைபேசியில் தாம் கலந்துரையாடியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர ஏற்றுக்கொண்டுள்ளார்.
தென்னிலங்கை பத்திரிகை ஒன்று இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த பேருந்தினை திருப்பி கொழும்புக்கு அழைத்துவரும்படி தாம் உத்தரவிட்டதாக வெளியாகிவரும் செய்திகளை நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்