சுமந்திரன் ஆடிய கபட நாடகம்!
தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவில் தானும் போட்டியிடப் போவதாக கபட நாடகமாடி சுமந்திரன் கூட்டத்தை குழப்பியதாக யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
தான் விரும்பியதை நிறைவேற்ற இது அவருடைய ராஜதந்திரம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுமந்திரனின் பொய் பேச்சு
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொதுச் செயலாளர் பதவிக்கு குகதாசன் தான் வரவேண்டும் என்று சுமந்திரன் விரும்பினார்.
இதன் காரணமாக தான் போட்டியிடப் போவதாக அறிவித்து கள நிலவரத்தை குழப்பி, சிறிநேசனை வெளியேற்றி தான் நினைத்த குகதாசனை அந்த பதவிக்கு சுமந்திரன் கொண்டு வந்தார். இதுதான் உண்மையில் நடந்த விடயம்.
சுமந்திரனின் பொய் பேச்சுக்களையும், பொய் கருத்துக்களையும் நம்பும் அளவுக்கு எல்லோரும் இருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் செயலாளர் தெரிவு
அத்துடன் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு வாக்கெடுப்பின் போது சுமந்திரன் சிறுபிள்ளைத்தனமாக செயற்பட்டு தான் நினைத்ததை சாதிக்க எண்ணியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழரசு கட்சியின் கூட்டத்திற்கு பின்னர் சுமந்திரன் மெய்ப் பாதுகாவலருடன் வெளியேறியதுடன் ஒருவர் கட்சியின் தொண்டரை அடிப்பது நெஞ்சு பதைபதைகும் செயல் என்று இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |