இன்று வெளியாகவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம்
தமிழ்ப் பொது வேட்பாளரான பா.அரியநேத்திரனின் (P. Ariyanethiran) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகவுள்ளது.
குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (3) யாழ்ப்பாணத்தில் (Jaffna) வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தமிழ்ப் பொது வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனம்
ஜனாதிபதி வேட்பாளர்கள் பலரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகவுள்ளது.
இந்த விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு தீர்வு உட்பட தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், தேவைகள் பலவும் உள்ளடக்கப்பட்டு இருக்கின்றன என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்தத் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் இம்மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |