ஜனாதிபதி தேர்தலில் இரண்டாக அதிகரித்த தமிழ் பொது வேட்பாளர்கள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலிய மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் (M. Thilakaraj) களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் நேற்று (09) செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர்கள் மலையக மக்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை என நுவரெலிய (Nuwara Eliya) மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினை
இதன் காரணமாகமலையக மக்களின் பிரச்சினைகளை வெளிகொணரும் வகையிலேயே தான் இந்த தேர்தலில் போட்டியிட எண்ணியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் (08) தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் அரியநேந்திரனின் (Arianendran) பெயர் முன்மொழியப்பட்டிருந்த நிலையில் மற்றுமொரு தமிழ் வேட்பாளராக திலகராஜ் களமிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |