இலங்கை தமிழ் சினிமா தொடர்பில் அநுர அரசின் நடவடிக்கை
இலங்கையில் (Srilanka) தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக வளர வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தை நவீன யுகத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்றையதினம் (18.10.2024) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனிப்பட்ட அனுகூலங்கள்
அவர் தொடர்ந்து கருத்து வெளியிடுகையில், கடந்த காலங்களில் திரைப்படங்களை வெளியிடுவதில் தனிப்பட்ட அனுகூலங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த விடயத்தில் புதிய நிர்வாக சபை தலையிட்டு நியாயமான முறையில் திரைப்படங்களை வெளியிடும் பணியை முன்னெடுக்க வேண்டுமென விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2004/2005 காலப்பகுதியில் அனைத்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவை இந்த நாட்டில் இன்னும் ஒரு தொழில்துறையாக நிலைநிறுத்த முடியவில்லை என்றும் தமிழ் சினிமா ஒரு தொழில்துறையாக வளர வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்