வடக்கு கிழக்கு முழுவதும் சங்கு சின்னத்தில் களமிறங்க ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானம்!

Suresh Premachandran Election General Election 2024 Sri Lanka General Election 2024
By Shadhu Shanker Oct 03, 2024 03:51 PM GMT
Report

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தேர்தல் திணைக்களத்தால் தற்போது சங்குச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வடக்கு - கிழக்கு முழுவதும் கூட்டணியாக சங்குச் சின்னத்தில் போட்டியிட உள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ் (Jaffna) கட்டப்பிராயில் உள்ள அவரது இல்லத்தில் இன்று(03) மதியம் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே! கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் எம்பி

தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே! கேள்வியெழுப்பியுள்ள முன்னாள் எம்பி

சங்குச் சின்னம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியானது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியாக இருக்கிறது. இந்த கூட்டணியில் நாங்கள் உட்பட ஜந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

வடக்கு கிழக்கு முழுவதும் சங்கு சின்னத்தில் களமிறங்க ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானம்! | Tamil Coalition Receives Conch Symbol Election Upd

கடந்த உள்ளூராட்சி சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போதும் நாம் அதில் போட்டியிடுவதற்கு வேட்புமனுவையும் தாக்கல் செய்திருந்தோம். இந்த கூட்டணியின் சின்னமாக குத்துவிளக்கு இருந்தது.

ஆனால் இப்போது நடைபெற்று முடிவடைந்திருக்கிற ஜனாதிபதி தேர்தலில் வடக்கு கிழக்கை மையப்படுத்திய தமிழ்த் தேசிய கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களை ஒண்றிணைத்த தமிழ் மக்கள் பொதுச் சபை ஆகியன இணைந்து பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தியிருந்தது.

கேள்விக்குரிய நிலையில் உள்ள தமிழ் தேசிய அரசியல்! தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சாடல்

கேள்விக்குரிய நிலையில் உள்ள தமிழ் தேசிய அரசியல்! தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் சாடல்

 பொது வேட்பாளர்

அந்த பொது வேட்பாளரின் தேர்தல் சின்னமாக சங்கு சின்னமும் வழங்கப்பட்டு அதற்கான பிரச்சாரங்களும் முன்னேடுக்கப்பட்டதற்கமைய தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இலட்சக் கணக்கில் மக்கள் அதற்கு வாக்களித்து இருந்தனர்.

வடக்கு கிழக்கு முழுவதும் சங்கு சின்னத்தில் களமிறங்க ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானம்! | Tamil Coalition Receives Conch Symbol Election Upd

இதேபோன்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கியதாக ஒற்றுமையை வலியுறுத்தி ஒரணியில் நாடாளுமன்ற தேர்தலிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியாக நாங்கள் போட்டியிடுகிறதால் தமிழ் மக்களின் ஓற்றுமையின் சின்னமாக விளங்கிய சங்கு சின்னத்தை எமது கூட்டணியின் சின்னமாக்குவதற்கு தீர்மானித்திருந்தோம்.

இதற்கமைய தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஒருமித்த தீர்மானமாக சங்குச் சின்னத்தை அதில் அங்கம் வகித்த ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தது.

விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: 25,000 ரூபாய் உர மானியம்!

விவசாயிகளுக்கு வெளியான நற்செய்தி: 25,000 ரூபாய் உர மானியம்!

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி

இதனடிப்படையில் சங்குச் சின்னத்தை ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். இக் கோரிக்கையின் அடிப்படையில் நேற்றையதினம் தேர்தல் ஆணையகத்தினால் சங்குச் சின்னம் எமக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

வடக்கு கிழக்கு முழுவதும் சங்கு சின்னத்தில் களமிறங்க ஐனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானம்! | Tamil Coalition Receives Conch Symbol Election Upd

இதற்கமைய எதிர்வரும் நாடா ளுமன்ற தேர்தலில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியாக ஒற்றுமையின் சின்னமான சங்கு சின்னத்தில் நாம் போட்டியிட இருக்கிறோம்.

அதிலும் வடக்கு கிழக்கு முழுவதும் நாம் போட்டியிடுகிற அதேநேரத்தில் கொழும்பிலும் இம்முறை போட்டியிடுவது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025