தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம்: நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் களமிறக்கப்படவுள்ள பொதுவேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த அறிவிப்பானது நாளை (08) வெளிவரும் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான யோசனை சில தமிழ்க் கட்சிகளாலும், சிவில் சமூக அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டிருந்தது.
பல பெயர்கள்
தமிழ் பொது வேட்பாளராகக் களமிறக்குவதற்காகப் பல பெயர்கள் கடந்த கூட்டங்களின் போது பரிசீலிக்கப்பட்டிருந்தன.
இதன் படி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் (P. Ariyanethiran) மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.வி. தவராசா (K.V. Thavarasa) ஆகியோரின் பெயர்கள் கடந்த கூட்டத்தின் போது இறுதி செய்யப்பட்டிருந்தன.
இந்த நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், சிவில் சமூக கட்டமைப்பினருடன் இணைந்து தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்
மக்கள் கூட்டணி, ரெலோ (TELO), புளொட், ஈபிஆர்எல்எப் (EPRLF), தமிழ் தேசிய பசுமை இயக்கம், தமிழ்
தேசிய கட்சி (
Tamil National Party), ஜனநாயக போராளிகள் கட்சி என்பன ஆதரவளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விடயங்கள் கீழுள்ள காணொளியில்.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |