நல்லூர் பிரதேச சபையின் தான்தோன்றித்தனம்: பதில் சொல்ல திணறும் தவிசாளர்
தமிழர் பகுதியிலுள்ள பிரதேச சபைகளுக்கு ஆளுமையுள்ள நபர்கள் தெரிவுசெய்யப்படவில்லை என கலாநிதி சிவக்குமார் சுப்பிரமணியம் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த விடயத்தை அவர் ஐபிசி தமிழின் உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மைய நாட்களாக நல்லூர் பிரதேச சபை, மானிப்பாய் பிரதேச சபை மற்றும் யாழ். மாநகர சபை என அனைத்து இடங்களிலும் தொடர் பிரச்சினைகள்தான் இடமபெற்று வருகின்றது.
இவை அனைத்தும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் செய்ய வேண்டிய வேலைகளை தவிர செய்ய தேவையில்லாத வேலைகளை தொடர்ந்து செய்து செய்து வருவதை வெளிப்படையாக காட்டுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கிழக்கு அரியாலை மிகவும் ரம்மியமான இடம் எனவும் உல்லாசப் பயணிகளைக் கவரக்கூடிய இந்த இடத்தை நல்லூர் பிரதேச சபை பாழாக்குவதை அவர் விரும்பவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு அவர், பல அறிவுரைகளை தெரிவித்ததுடன் கிழக்கு அரியாலையை ஒரு உல்லாச மையமாக மேம்படுத்தும் விரிவான திட்ட வரைபடத்தை நல்லூர் பிரதேச சபைக்கு சமர்ப்பிக்க உதவ அவர் முன்வந்துள்ளார் .
மேலும், அவர் தெரிவித்த விரிவான பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய உண்மைகள் பேசட்டும் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
